Tuesday, August 5, 2014

இலங்கை தொடர்பிலான விடயங்களில் மூக்கை நுழைக்க மேற்கத்தேயத்திற்கு முடியாது! - உலக அழகுராணி கார்ட்டியா

இலங்கை மனித உரிமைகள் விடயங்கள் தொடர்பில் மேற்கத்தேய நாடுகள் எவ்வித்த் தீர்ப்பும் வழங்க்க் கூடாது எனவும், அது வேண்டத்தகாத வேலை எனவும் 2013 மிஸ் ஏர்த் எயார் எனும் உலக அழகிப் போட்டியில் தெரிவான கர்ட்டியா வெக்னர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தான் சுற்றுலா மேற்கொண்டபோது, மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான எந்தவொரு விடயத்தையும் தான் காணவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாப்பது தொடர்பில் ஐரோப்பா மற்றும் மேற்கத்தேய நாடுகளினால் மேற்கொள்ளப்படுகின்ற விமர்சனங்கள் தொடர்பில் அவரிடம் வினவியபோதே அவர், “என்னால் கூறமுடிந்தது என்னவென்றால், ஆசிய நாடுகள் தொடர்பில் தீர்ப்பு வழங்கும் அதிகாரம் ஐரோப்பிய நாடுகளுக்கு இல்லை. அதேபோல இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் தொடர்பில் தீர்ப்பு வழங்கும் அதிகாரம் எங்களுக்கும் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

“எல்லோருக்கும் தங்களுக்கான கலாச்சாரம் ஒன்று உள்ளது. ஐரோப்பியர்களுக்கும் அவர்களுக்கான கலாச்சாரம் உள்ளது. அதுதொடர்பில் இலங்கையர் தெரிந்துகொள்ளாமல் இருக்கலாம்.” என அவர் தெரண தொலைக்காட்சிச் சேவையில் இடம்பெற்ற நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். “இலங்கை இரக்க சுபாவம் கொண்டவர்கள் வாழ்கின்ற நாடு. இலங்கையில் எந்தவொரு கெட்டவிடயத்தையும் நான் காணவில்லை” இலங்கையுடன் தனக்கு அறுபடாத பிணைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அழகுராணி குறிப்பிட்டுள்ளார்.

2014 ஆம் ஆண்டுக்கான தெரணவின் அழகுராணிக்கு கிரீடம் அணிவிக்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவே 2013 அழகுராணி இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com