வார்த்தை தவறிய கூட்டமைப்பும், வாக்கு மாறிய பொதுமக்களும். ஜோசப்மகேந்திரன்.
நாம் அரசியல் தீர்வு, சமாதானம் வருமென நம்பி ஏமாந்தகாலம் மாறி சுயமாக சிந்திக்கும் கால, நேரத்தில் இருக்கின்றோம்.சரியானதை தேர்வு செய்ய வரும் தேர்தலே சரியான சந்தர்ப்பமாகும். வார்த்தையையும், வாக்கையும் ஒன்றாக சிந்திக்க வேண்டாம். அவை இரண்டுக்கும் சிறிய வித்தி யாசம்தான்.
இதுவரை காலமும் தமிழ்மக்களுக்கு எதைசரியாக செய்தவர்கள். ஏமாற்று வேலையை தவிர. 1929ம் ஆண்டு பாண்டாரநாயக்கினாவால் கொண்டுவரப்பட்ட தேசிய அரசின் ஆலோசனையும் தட்டி கழித்தவர்களும் இவர்கள்தான், 1948 சுதந்திரத்துக்கு பின்னும் ஏமாற்றுகிறவர்களும் அதே தேசியம் பேசுகின்றவர்கள். 1956மாண்டுகொண்டுவரப்பட்ட தனிசிங்களசட்டம் தான் தமிழர்களை ஏமாற்றியதாக சொல்லும் இவர்கள் 1976ம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானம் எதைகொண்டுவந்தது என்பதை மனம் திறந்து சொல்லமுடியுமா?
உங்கள் சுகபோகவாழ்வுக்கு பலகாலமாக வாழவேண்டிய மக்களை அழித்து, சொத்துக்களையும் இழந்ததும் போதாது வெட்டிபேச்சும் வாக்கு கொடுப்பதும்தான்மிச்சம். உலக அரசியல் வரலாறுகளையும் புரட்டிப்பார்க்கவேண்டும் அப்பொழுதுதான் தெரியும் நாங்கள் மக்களுக்கு விட்டதவ
றுகள்பற்றி.
இந்தியாசுதந்திரம் பெற்று ஒப்பந்தம் கைசாத்திடும்னேரத்தில் ஜின்னாவைக்கொண்டு பாக்கிஸ்தானை பிரித்ததுமாத்திரமில்லைஈ கஸ்மிரையும் இரண்டாக பிரித்த எல்லைக் கோடுபோட்டுபிரச்சினைக்கு தீர்வில்லா யுத்தமும் அழிவும் தொடர்கிறது. அதேபோலத்தான் இலங்கையிலும் தனிசிங்களசட்டம் கொண்டுவந்து இனக்கலவரம் முடியாமல் தொடர்கதையாகின்றது. இவைகள் எல்லாம் சர்வதேச சூழ்ச்சிகள். இவைற்றை புரியாமல் றீல் விடவேண்டாம்.
லத்தீன் அமொரிக்காநாடுகளும், ஆபிரிக்காநாடுகளும், ஆசியநாடுகளிலும், பல்கன், நாடுகளிலும் இவைதொடர்கதையாக இருக்கிறது. இரண்டாம்மாகயுத்தம் முடிவுக்கு வந்தபிறகு ஏற்படுத்தப்பட்ட ஐ.நா.ஒப்பந்ததின் பிறகு1945ம் ஆண்டுக்குப்பிறகுகம்யூனிசநான்டுகளை சுரண்டுவதும் அடிமைகளாகவும் மாற்றுவதே இத்திட்டத்தின் நோகங்களாகவும், திட்டமுமாகும்.(வளர்முக நாடுகளை சீர்குலைப்பதும், அவைகளின் உள்ளகவிஷயங்களில் மூக்கை நூளைப்பதும் தொடர்கதைகளாக இன்று நடைபேறுகின்றது.
அந்தவகையில்தான் நாகரீகமானகாட்டுமிராண்டித்தனம் இலங்கையிலும் இடம்பெறப்போகின்றது. தமிழ்மக்களின் அதிகவிருப்பம், வசதியான நாட்டில் வாழ்வதுதான். தமிழ்மக்களின் அரசியல் பிரச்சினை தீர்ப்பதர்க்கான நம்பகத்தன்மைவாய்ந்த தமிழ் அரசியல் தலமைகள் இல்லை!
சுரேஸ்,சம்பந்தன், மாவை, சுமந்திரன், சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் இவர்களுடைய அரசியல் வாழ்க்கைகளை, சற்று ஆராயவேண்டியது மக்களாகிய உங்கள் கடமை. இவர்கள் யார்? எங்கிருந்துவந்தர்கள்? இவர்கள் இதுவரைகாலத்திலும் எதுவிதபிரச்சினையில்லாது தங்கள்காலத்தை நடத்தமுடியுமாயின்! ஏன் உங்களால் முடியாது விடை கானுவதும், சிந்திப்பதும் உங்கள் தேர்வு. உ+ம்,ஒரு நோயாளி தன் நோயை கண்டுபிடித்து வைத்தியம் செய்வதர்க்காக, வைத்தியரிடம் செல்கின்றான் சிலவைத்தியர் நோய் தெரிந்தும் இழுத்தடிப்பார்கள் அப்படிப்பட்ட தமிழர் தலைமைதான் நீங்கள் தெரிவு செய்த அரசியல் தலமை.
பாரளுமன்ற விவாதநேரத்தில் சம்பந்தன் ஐயா சம்பந்தமில்லா கேள்வி கேட்டார் தெரியுமோ? பராளுமன்றத்தின் அனுமதி பெற்றா யுத்தம் செய்தீர்கள் என்று! அதேபோன்று உங்களிடத்திலும் இவ் கேள்வி கேட்டால் என்ன சொல்லுவீர்கள்? யாழ்ப்பாண மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டாதினாலே உங்கள் புலூடாவாய்காமல் போகின்றபொழுது இனவாத மந்திரத்தை, தந்திரத்தை விதைத்த உங்களுக்குத் தெரியாதா? அல்லது சங்கரி ஐயாவுக்குமா! அமிர்தலிங்கமையா பிற்காலத்தில் மனவேதனைப்பட்டநேரத்தில் அவரையும் பொட்டு தள்ளிவிட்டு இப்ப கதைவிடுகிறீர்கள்.
எல்லாம் கடவுளுக்குத்தான் வெளிச்சம். சந்திரிகா அம்மாவிடம் உங்களை பாதுகாக்க குண்டுதுளைக்காத வாகனம்வாங்கமுடியுமாயின் ஏன் மக்களை பாதுகாக்க ஐக்கியம் உங்கள் கட்சிக்கு வரவில்லை? நீங்கள்அரசியல் சதுரங்கத்தில்(சூதாட்டத்) மக்களை ஏமாற்ற, இதேவேலையைத்தான் இப்ப போராளிகளும் செய்கின்றர்கள்.
இப்படியான விஷயங்களை தட்டி கேட்டால் நீ துரோகி சிங்களவனுக்கு பிறந்தனி என கதை விடுவதெல்லாம் தமிழ் சமூகதிலேயிருந்து கற்றவைதான்!
அரசியலுக்கும், அகதிவாழ்க்கைக்கும் வித்தியாசம் புரியுமா? அரசியல்வாதியெனப்படுபவர் ஜனநாயக தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப்படுபவர். இவர் மக்களின் தேவைகளை மானிய நிதி ஒதுக்கீட்டின்மூலமாக பெற்றுக்கொடுப்பதுதான் (வேலைவாய்ப்பு, வீட்டுத்திட்டம், நிவாரனம், காலாச்சாரச ம்பந்தாமான மற்றும் சில)ஆனால் சட்டவிரோத செயல்கள் அல்ல? உ+ம் அரசகாணி, மரக்கடத்தல், கள்ளச்சாரயாஉற்பத்தி, விபச்சாரவிடுதி, கள்ளக்கடத்தல் மற்றும் பல.
ஜனநாயாக அரசியல் வாதியின் மக்களுக்கு செய்யும் கடமைகளாகும். மக்கள் விரோத செயல்பாட்டில் ஒரு அரசோ, அல்லது அரசியல் வாதியோ ஈடுபட்டால் அவர்களுக்கெதிராக மக்கள் போராடி துன்புறுத்தப்படும் போது அவர் நாட்டை விட்டு ஒருநாட்டில் தஞ்சம் கோரமுடியுமாயின் அது அரசியல்
புகழிடம் இதுதான் அகதி. நாட்டில் அவர் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டால் அவருக்கு தேவையான்
சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.(தங்குவதர்க்கு வீடு பணம், கலாச்சார நிகழ்ச்சிகள்,) வாக்குப்போடும் உரிமம் இல்லை. அகதிகளுக்கு வழங்கப்படும் வசதிகளைப்பொல ஒரு அரசியல் வாதியும் தன்னை தெரிவு செய்தமக்களுக்கு செய்தால் இப்படிபிரச்சினைகள் வருவதர்க்கு சான்ஸ்செ இல்லையெனலாம். எனது அரசியல் அனுபவத்தின் வாயிலாக இதுவரைகாலமும் பாரளுமன்ற உறுப்பினராக இருந்த எவரும் பசி பட்டினி என இருந்ததில்லை மக்களை தவிர.
மாற்றம் ஒன்றே மாறதது உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் அடுத்த பாரளுமன்ற தேர்தலாகட்டும்.
(தொடரும்)
0 comments :
Post a Comment