Sunday, August 10, 2014

பொறுமைக்கும் எல்லையுன்டு! பொறுமையை பலவீனமாகக் கருதினால் அதன் விளைவுகள் பாரதூரமாக இருக்கும்!

தமிழ் மக்களை ஏமாற்றி அரசிற்கு எதிராக திருப்பவும் முயற்சி!

அரசிற்கு எதிரான அறிக்கைகள் மூலமாக தமிழ் மக்களை ஏமாற்றி வருவதுடன் எதிராக திருப்பவும் முயற்சி பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு எமது பொறுமையை எவராவது பலவீனமாகக் கருதினால் அதன் விளைவுகள் பாரதூரமாக இருக்கும். தமிழ் ஊடகங்கள் நினைத்தால் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண தமது காத்திரமான பங்களிப்பை நிச்சயம் மேற்கொள்ள முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இனப் பிரச்சினைத் தீர்வு விடயத்தில் அரசாங்கம் இதய சுத்தியுடனேயே செயற்பட்டு வருகிறது. பேச்சுவார்த்தை மூலமாகத் தீர்வு காண வருமாறு அரசாங்கம் தொடர்ச்சியாகப் பல தடவைகள் தமிழ்க் கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுத்து வருகின்றது. இரண்டு தினங்களுக்கு முன்னர் கூட அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் ஜி. எல். பீரிஸ் பாராளுமன்றத்தில் வைத்து நேரடியாக ஒரு அழைப்பையும் விடுத்திருந்தார்.

ஆனால் அவர்கள் இதுபற்றி அலட்டிக் கொள்வதில்லை. மாறாக தமக்குச் சார்பான தமிழ் ஊடகங்களில் தமக்குச் சார்பாக அறிக்கைகளை விட்டு தமிழ் மக்களை ஏமாற்றி வருவதுடன் அம்மக்களை அரசாங்கத்திற்கு எதிராகத் திருப்பவும் முயற்சித்து வருகின்றனர். இது ஆரோக்கியமானதல்ல. எமது பொறுமைக்கும் ஓர் எல்லை உள்ளது. எமது பொறுமையை எவராவது பலவீனமாகக் கருதினால் அதன் விளைவுகள் பாரதூரமாக இருக்கும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இனப் பிரச்சினைத் தீர்வு விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மீண்டுமொரு பேச்சுவார்த்தையை நடத்தத் தயாராக உள்ளதா எனும் எமது வினாவிற்கே ஜனாதிபதி பதிலளித்தார்.

தமிழ் ஊடகங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழில் விட்டுவரும் அரசாங்கத்திற்கு எதிரான அறிக்கைகள் மற்றும் சர்வதேச விசாரணை தொடர்பாகத் தெரிவித்துவரும் கருத்துக்கள் வரவேற்கத்தக்கவை அல்ல. நாம் இந்தத் தீர்வு காணும் விடயத்தில் தமிழ்க் கூட்டமைப்பிற்கு பல சந்தர்ப்பங்களை வழங்கினோம். அவை எதனையுமே அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை.

அரசாங்கம் ஏதோ தமக்குத் துரோகம் இழைப்பது போலவும்இ தீர்வு காணும் விடயத்தில் அரசாங்கமே பின்னடிப்புச் செய்து வருவதாகவுமே பிரசாரம் செய்கின்றனர். இதனைத் தமிழ்க் கூட்டமைப்பு மாற்றிக்கொள்ள வேண்டும். தமிழில் அறிக்கை விட்டால் எனக்கோ அல்லது அரசாங்கத்திற்கோ எதுவுமே தெரியாது என அவர்கள் நினைத்து வருகிறார்கள். அவர்களது ஒவ்வொரு அறிக்கைகளும் எம்மால் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருகிறது என்றும் ஜனாதிபதி கூறினார்.

அத்துடன் எமது தாய்நாட்டின் நலன் கருதி தமிழ் ஊடகங்கள் இவ்விடயத்தில் பொறுப்புடன் செயல்பட முன்வர வேண்டும் எனவும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார். அரசாங்கம் தவறு செய்தால் சுட்டிக்காட்டுங்கள். ஆனால் தமிழ்க் கூட்டமைப்பு போன்ற சில கட்சிகள் முன்வைக்கும் பொய்யான குற்றச்சாட்டுக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண தமிழ் ஊடகங்களின் காத்திரமான பங்களிப்பு மிக அவசியம். தமிழ் ஊடகங்கள் நினைத்தால் தமிழ்க் கூட்டமைப்பை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு அழைத்துவர முடியும். அவ்வாறு செய்தால் நாட்டிற்கும் தமிழ் மக்களுக்கும் நன்மை செய்தவர்களாக இருப்பீர்கள் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். ஒவ்வொரு அறிக்கைகளும் எம்மால் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருகிறது. என்றும் ஜனாதிபதி கூறினார்.

அத்துடன் எமது தாய்நாட்டின் நலன் கருதி தமிழ் ஊடகங்கள் இவ்விடயத்தில் பொறுப்புடன் செயல்பட முன்வர வேண்டும் எனவும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார். அரசாங்கம் தவறு செய்தால் சுட்டிக்காட்டுங்கள். ஆனால் தமிழ்க் கூட்டமைப்பு போன்ற சில கட்சிகள் முன்வைக்கும் பொய்யான குற்றச்சாட்டுக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண தமிழ் ஊடகங்களின் காத்திரமான பங்களிப்பு மிக அவசியம். தமிழ் ஊடகங்கள் நினைத்தால் தமிழ்க் கூட்டமைப்பை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு அழைத்துவர முடியும். அவ்வாறு செய்தால் நாட்டிற்கும்இ தமிழ் மக்களுக்கும் நன்மை செய்தவர்களாக இருப்பீர்கள் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் பிரதானிகளை கடந்த செவ்வாயன்று அலரி மாளிகையில் சந்தித்துரையாடிய ஜனாதிபதி எமது பத்திரிகையின் சார்பில் எழுப்பிய பிரத்தியேகமான கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.

1 comments :

arya ,  August 11, 2014 at 1:31 AM  

ஜனாதிபதி சொல்வது முற்றிலும் உண்மை, முன்பு புலிகளால் அரசியல் தீர்வு தடை பட்டது, இப்போ கூட்டமைப்பால் தடை படுகின்றது , இந்திய இலங்கை ஒப்பந்தத்தால் இணைந்த வட கிழக்கை , பிரித்ததுதான் புலிகள் தமில்களுக்கு கொடுத்த பரிசு , அதற்காக புலன் பெயர் முட்டாள் கூட்டங்கள் பல மில்லியன் பணத்தை வெள்ளை காரங்களுக்கு குண்டி கழுவி கொடுத்தாங்கள் , இப்ப புலன் பெயர் முட்டாள் கூட்டங்கள் கூட்டமைப்பு ஸ்ரீ தரனுக்கு பல மில்லியன் பணத்தை கொடுத்து குழப்புகின்றன, இலங்கை அரசு பிரிவினை பேசுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், தென் பகுதியில் இருந்து வரும் மின்சாரம் எதற்கு தென் பகுதியை எதிர்க்கும் வட மாகாணத்துக்கு கொடுக்க வேண்டும் , முதலில் அதை நிறுத்த வேண்டும் , தென் பகுதி மக்களின் உழைப்பின் வரும் அபிவிருத்தியை அனுபவித்த படி அரசை குறை கூறும் கூட்டங்களை பழிவாங்க வேண்டும்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com