தேர்தல் சட்டதிட்டங்களை மீறி ஊர்வலம் சென்ற தென் மாகாண ஐ.தே.க உறுப்பினர் ரூபா 2 இலட்சம் சரீரப் பிணையில் விடுதலை!
தென் மாகாண சபைத் தேர்தல் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்ட கடைசித் திகதியில் தேர்தல் சட்ட திட்டங்களை மீறி ஊர்வலம் சென்ற குற்றத்தின் பேரில் நேற்று (05) நீதிமன்றில் ஆஜராகியிருந்த தென் மாகாண சபை ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் விஜேபால ஹெட்டி ஆராச்சி ரூபா 2 இலட்சம் சரீரப் பிணையில் காலி நீதவான் யூ.எஸ். கலங்சூரியவினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சென்ற மார்ச் மாதம் 29 ஆம் திகதி நடைபெற்ற தென் மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்ட கடைசித் திகதியான பெப்ரவரி மாதம் 06 ஆம் திகதி சட்டத்திற்கு எதிராக ஊர்வலம் சென்றதாக பொலிஸார் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
(கேஎப்)
0 comments :
Post a Comment