Friday, August 15, 2014

நுவரெலியா கோல்ப் கழக 125 ஆண்டு விழா! பிரதம அதிதியாக ஜனாதிபதி (படங்கள் இணைப்பு)

நுவரெலியா கோல்ப் கழகத்தின் 125வது ஆண்டு பூா்த்தியை முன்னிட்டு இன்று (15)மாலை 5 மணியளவில் நுவரெலியா கோல்ப் மைதானத்தில் பல நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டார்.

மத்திய மாகாண சபை முதலமைச்சா் சரத் ஏக்கநாயக்க, மத்திய மாகாண சபை ஆளுநா் டிக்கரி கொப்பேகடுவ, அமைச்சா் சீ.பீ. ரத்நாயக்க, நவீன் திசாநாயக்க மற்றும் அமைச்சா் ஆறுமுகன் தொண்டமான் என பல முக்கியஸ்தர்களும், கோல்ப் கழக அங்கத்தவர்களும் கலந்து கொண்டனா்.

கோல்ப் கழகத்தின் 125வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறப்பிக்குமுகமாக இலங்கை தபால் நிலையத்தால் ஞாபகா்த்தமாக தபால் முத்திரை ஒன்று ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

இந்த 125வது ஆண்டு பூா்த்தியை முன்னிட்டு நாளை (16)கோல்ப் கழக மைதானத்தில் விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளமை குறிப்பிடதக்கது.

(க.கிஷாந்தன்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com