12 வயது மாணவியை 12 ஆம் திகதி கெடுத்த வயோதிப 75 வயது வியாபாரி கைது!
12 வயது சிறுமியொருத்திக்கு துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் 75 வயது வியாபாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என கொட்டவெஹெர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துஷ்பிரயோகித்திற்கு உள்ளாகியுள்ள சிறுமி சென்ற 12 ஆம் திகதி மாலைநேரம் குற்றம் சுமத்தப்பட்டுள்ள வியாபாரிக்குச் சொந்தமான கடைக்குச் சென்றுள்ளார். அவ்வேளை வியாபார நிலையத்தின் உட்பகுதிக்கு சிறுமியை அழைத்துச் சென்றுள்ள சந்தேகநபர் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். அந்நேரம் வியாபார நிலையத்திற்கு வந்துள்ள இரு பெண்கள் இதனை நேரில் கண்டுள்ளனர்.
பின்னர் இவ்விடயம் கொட்டவெஹெர பொலிஸாருக்கு முறைப்பாடாகக் கிடைத்துள்ளது. அதற்கேற்ப பொலிஸார் சந்தேக நபரைக் கைதுசெய்துள்ளனர். பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ள சிறுமி வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அநுமதிக்கப்பட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment