பெண்ணையும் சிறுவனையும் கொன்ற வெளிநாட்டுத் தம்பதிக்கு கொழும்பு நீதிமன்றினால் மரண தண்டனை விதிப்பு !!
ராஜகிரியவில் வெளிநாட்டுச் சிறுவனொருவனையும் இலங்கைப் பெண்ணொருவரையும் கொலை செய்தமை தொடர்பான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து யுக்ரைனிய தம்பதியொன்றுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அதேவேளை, மேற்படி சிறுவனின் தாயை தாக்கி காயம டையச் செய்தமைக்காக 15 வருட சிறைத் தண்ட னையும் 25000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. இதனைச் செலுத்த தவறும் பட்சத்தில் மேலுமொரு வருடச் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அத்துடன் காயமடைந்த பெண்ணுக்கு தலா 5 லட்சம் படி நட்ட ஈடு செலுத்துமாறும் அதனை செலுத்த தவறின் மேலதிகமாக 12 மாத சிறைத்தண்டனை வழங்கப்படுமென்றும் உயர் நீதிமன்றத்தின் நீதியரசர் தேவிகா தென்னகோன் தலைமையிலான மூன்று நீதியரசர்களைக் கொண்ட குழாம் மேற்படி கொலைச் சம்பவம் 2010 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்றிருந்தது.
0 comments :
Post a Comment