Thursday, July 17, 2014

காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடு!! விசாரணைக்கு சர்வதேச சட்ட வல்லுனர்கள் மூவர் நியமனம்!

காணாமல் போனோர் தொடர்பாக கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்க மூவர் அடங்கிய ஆலோசனை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சர்வ தேச சட்ட வல்லுனர்கள் மூவர் அடங்கிய இந்த ஆலோசனை சபை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை அறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சுமத்தப்பட்டுள்ள பணிகளை மேலும் வெற்றிகரமாக நிறைவேற்றும் வகையில் சட்டம் உட்பட குறித்த விடயங்கள் தொடர்பாக போதிய அறிவும் அனுபவமும் உள்ள சர்வதேச புகழ் பெற்ற நிபுணர்களின் சேவை பயனுள்ளதாக அமையுமென்று தீர்மானித்துள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் இது தொடர்பான விடயங்களை விரிவுப்படுத்துவதற்கு தீர்மானித்தார்.

இதன் அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆலோசனை குழுவிற்கு சேர் டெஸ்மன் டி சில்வா, தலைமைதாங்குகின்றார். பேராசிரியர் சேர் ஜெப்ரிநைஸ், பேராசிரியர் டேவிட் கிரேன் ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாவர். அரச சட்டத்தரணி சேர் டெஸ்மன் டி சில்வா ஆயுத மோதல்கள் தொடர்பான சட்டம் குறித்த ஆழ்ந்த அறிவை பெற்றவராவார். முன்னாள் ஐ.நா செயலாளர் நாயகம் கொபி அனனினால் ஒரு போது ஐக்கிய நாடுகள் குற்றவியல் நீதிமன்றத்தின் பிரதம ஆலோசகராக பிரத்தியோகமான முறையில் டெஸ்மன் டி சில்வா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இலண்டனில் சட்டத்துறை, வல்லுனராக பெரும் பணியாற்றியுள்ள அவர் அந்நாட்டின் மிகப்பெரிய நீதிச்சபையின் 25 ஆண்டுகால தலைமை பதவியையும் வகித்துள்ளார். சர்வதேச சட்டத்துறைக்கு அவர் ஆற்றிய பணியை பாராட்டி பிரிட்டிஸ் மகாராணி அவருக்கு நைட் பட்டத்தையும்வழங்கியுள்ளார். அவர் ரோயல் பிரிச் கவுன்சிலின் அங்கத்தவருமாவார். மரண தண்டனை விதியான ஒருவரை கென்யாவில் விடுதலை செய்து, கொண்டதன் மூலம் அவர் பெரும் புகழை ஈட்டியுள்ளார். அவ்வாறு விடுதலையானவர் பின்னர் கென்யாவின் கடைசி பிரதமராகவும் திகழ்ந்துள்ளார். டெஸ்மன் டி சில்வா பிரிட்டிஸ் சட்டத்துறையில் ஏனைய உறுப்பினர்களிலும் பார்க்க பொதுநலவாய சபையில் மரண தண்டனை விதியானோரை விடுதலை செய்துள்ளதாக இலண்டன் டைம்ஸ் பத்தி;ரிகை ஒரு போது செய்தி வெளியிட்டிருந்தது.

பிரிட்டிஸ் அரசாங்கம் 2010 ஆம் ஆ;ணடு பிரிட்டிஸ் பாதுகாப்பு சபை, ஐஆர்.ஏ அமைப்புடன் இடம்பெற்ற மோதல்களில் பிரிட்டிஸ் சபையின் வட அயர்லாந்தில் செயற்பட்ட விதம் தொடர்பான விசாரணை சபைக்கு டெஸ்மன் டி சில்வா தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

பேராசிரியர் அரச சட்டத்தரணி சேர் ஜெப்ரி நைஸ் இலண்டனில் சர்வதேச சட்டம் தொடர்பான பேராசிரியராவார். அவர் சேர்பியாவின் முன்னாள் ஜனாதிபதி மிலோசவிச் தொடர்பாக ஹேக் நீதிமன்றத்தின் தலைமை பதவியை வகித்துள்ளார். அவர் சர்வதேச குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக மிகுந்த அனுபவமுள்ள சிறந்த சர்வதேச சட்டத்தரணியாவார்.

ஜனாதிபதியினால் ஆலோசனை சபைக்கு நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர்டேவிட் கிரேன், சியராலியோன் தொடர்பான விசேட நீதிமன்றத்தின் முக்கியஸ்தராக செயற்பட்டுள்ளார். யுத்த குற்றச் செயல் தொடர்பாக 50 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வரும் லைபீரியாவின் முன்னாள் ஜனாதிபதி சால்ஸ் டெய்லர் கைது செய்யப்பட்டமை அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தமை வழக்கு விசாரணை போன்றவற்றில் அவர்முக்கிய பணியாற்றியுள்ளார். அவர் அமெரிக்க இராணுவத்தில் குறிப்பிடத்தக்க அனுபவங்களை கொண்டவராவார். பேராசிரியர் கிரேன் சேர் டெஸ்மன் டி சில்வாவுடன் இணைந்து சிரியாவின் தடுப்பு முகாம்களிலுள்ள அங்கத்தவர்களை படுகொலை செய்தமை அவர்களை சித்திரவதைக்குட்படுத்தியமை தொடர்பாக ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்கு விசாரணைக்கு ஆதரவு வழங்கியுள்ளார்.

காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கைக்கு ஏற்ப இடம்பெற்றுள்ளது. 2009 ஆம்ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி நிறைவடைந்த உள்ளக மோதல்கள் நடைபெற்ற காலப்பகுதியில் பொது மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்படுவதற்கு காரணமான முக்கிய விடயங்கள் நிலைமைகளை ஆராய்ந்து எவரேனும் அல்லது எந்தவொரு குழுவோ அல்லது நிறுவனமோ இதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பொறுப்பு கூற வேண்டியிருந்தால் அதனை கண்டறியும் வகையில் ஆணைக்குழுவின் விடயங்கள் ஜனாதிபதியினால் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. அரச சார்பற்ற செயற்பாட்டாளராக எல்ரிரிஈயினரின் ஆயுத நடவடிக்கைகள் இடம்பெறும் போதுசர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்குட்பட்டவையா என்பது தொடர்பாக கண்டறியப்படும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com