மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்து சுவிட்சர்லாந்தைச் சேர்ந்தவர் கேரளாவில் கைது!
சுற்றுலா வீசாவில் இந்தியாவின் கேரளா பிரதேசத்திற்கு சென்றிருந்த 24 வயதான ஜோனாதன் போல்ட் என்ற நபரை மாவோயிஸ்டுகளுடன் தொடர்பிருப்பதாக கூறி பிரதேச போலீசார் கைது செய்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றது.
சுற்றுலா விசாவில் கேரளா சென்ற அவர், சினோஜ் என்ற மாவோயிஸ்டு தீவிரவாதியின் நினைவு நாள் கூட்டத்தில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. கேரளாவை சேர்ந்த சினோஜ் ஆந்திரா-கர்நாடகா எல்லையில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது கடந்த மாதம் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.
அம்மாநிலத்தில் உள்ள வளப்பாடில் உள்ள சினோஜின் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்த நினைவு நாள் கூட்டத்தில் ஜோனாதன் போல்ட் கலந்து கொண்டதை தெரிந்துகொண்ட போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து மாவோயிஸ்டு இயக்கத்தின் சித்தாந்த இதழ்களும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிப்பதுடன் அவர் மீது விசா விதிமுறைகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 10ந் தேதி பெண் ஒருவருடன் கேரளா வந்தடைந்த அவர், கன்னூர் உள்பட மாநிலத்தின் பல பகுதிகளை சுற்றிப்பார்த்துள்ளார் என்பதுடன் பல்வேறு தகவல்களை திரட்டியுள்ளதாகவும் அச்செய்திகள் கூறுகின்றது.
0 comments :
Post a Comment