ஊவா தபால்மூல வாக்குகளுக்கான விண்ணப்ப முடிவுத் திகதிஆகஸ்ட் 06!
ஊவா மாகாண சபைத் தேர்தலுடன் தொடர்புற்ற தபால் வாக்குகளை அளிப்பதற்கு விரும்பும் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர்கள் அனைவரும் அத்தேர்தலுடன் தொடர்பான விண்ணப்பங்களை எதிர்வரும் ஆகஸ்ட் 06 ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.
இந்தத் திகதி நீடிக்கப்பட மாட்டாது எனவும், ஊவா மாகாண சபைத் தேர்தலில் கடமையாற்ற விரும்பும் அரச அலுவலர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் அந்த மாகாணத்தில் பதிவாகியுள்ள மற்றும் அந்த மாகாணத்தில் தேர்தலுடன் தொடர்புடைய பிற கடமைகளில் பங்காற்றவுள்ள அதிகாரிகள் தபால் மூல வாக்களிப்புச் செய்யும் வரப்பிரசாதம் பெற்றவர்கள் என அவர் குறிப்பிட்டார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment