அநுர திசாநாயக்க ஜனாதிபதி அபேட்சகரா? விடை தருகிறார் சோமவங்ச
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதி அபேட்சகராக போட்டியிடவுள்ளார் என்ற கருத்துத் தொடர்பில், அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோமவங்ச அமரசிங்க கருத்துரைத்துள்ளார்.
வார இறுதி சிங்கள பத்திரிகையொன்றுக்கு அவர் கருத்துரைக்கும்போது,
“மக்கள் விடுதலை முன்னணி 1982 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னிருந்தே “பொது அபேட்சகர்” என்ற வாசகத்தை ஏந்திவந்துள்ளது. அது வெறுமனே கொண்டுவரப்பட்ட வாய்ப்பேச்சல்ல. மக்கள் விடுதலை முன்னணி அன்றி, ஏனைய அனைவரும், அனைத்துக் கட்சிகளும் பொது அபேட்சகர் பற்றியே பேசுகின்றன. இதுதொடர்பில் எங்களுக்கும் ஏனையவர்களுக்கும் இடையே பெரிய வேறுபாடு இருக்கின்றது. எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தலில் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றி தீர்மானித்ததன் பின்னர் பொதுமக்களுக்கு அறிவிப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment