புத்தசாசன அமைச்சில் மீண்டும் குடியேறுவோம்! - இராவண பலய
புத்தசாசன அமைச்சில் உருவாக்கப்பட்டுள்ள மத விவகாரங்கள் தொடர்பான பொலிஸ் பிரிவு மூடப்படாதுவிடின், அடுத்த வாரம் அமைச்சிக்குச் சென்று குடியேறுவோம் என இராவண பலய அமைப்பின் தலைவர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் குறிப்பிடுகிறார்.
“நாங்கள் குறிப்பிட்டதுபோல, அமைச்சில் குடியேறச் சென்றோம். பாய், தலையணை எடுத்துக்கொண்டே அங்கு சென்றோம். சென்று புத்த சாசன அமைச்சின் செயலாளரின் அறையில் தங்கினோம். அதனைக் கண்டு அவர் குழம்பிப் போனார். உடனே தொலைபேசியில் அங்குமிங்கும் கதைத்தார். பேச்சுவார்த்தைக்குச் சந்தர்ப்பம் கேட்டார். அந்த ஒரு வாரம் மட்டுமே நான் சகித்துக் கொண்டு இருப்பேன். வாரம் முடிவடைந்த்தும் நான் மீண்டுமு அமைச்சுக்குச் சென்று அங்கு குடியேறுவேன். பொலிஸ் பிரிவினை அகற்றாதுவிட்டால், அமைச்சின் செயலாளரும், நானும், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் ஒன்றாக நின்று ஒன்றுக்கு உணவு சமைத்து அங்கே குடியிருக்க நேரிடும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment