பேருவளை மற்றும் அளுத்கம சம்பவம் தொடர்பில் சீ. சீ. ரி. வி. ஆதாரங்கள் இருந்தால் பொலிஸாருக்கு வழங்குமாறு கோரிக்கை
பேருவளையில் பிரபல வர்த்தகரின் வீட்டுக்கு தீ வைத்த நால்வர் பாதுகாப்பு கமராவின் உதவியுடன் கைது
பேருவளையிலுள்ள மாணிக்கக் கல் வர்த்தகரின் வீட்டிற்கு தீ வைத்து சேதப்படுதியவர்களை வர்த்தகரின் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கமராவின் (CCTV) மூல மாகவே அடையாளம் காணப்பட்டு கைது செய்யப் பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துளளார்.
கைது செய்யப்பட்ட நால்வரும் எதிர்வரும் 07 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பேருவளை மற்றும் அளுத்கம பிரதேசங்களில் இனங்களுக்கிடையே ஏற்பட்ட பதற்ற நிலையை சாதகமாக பயன்படுத்தியே மேற்படி கும்பல் குறித்த வீட்டினை சேதப்படுத்தியுள்ளது. இதனால், பல இலட்சம் ரூபாய் பெறுமதியாக உடைமைகள் சேதப்படுத் தப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி, பேருவளை மற்றும் அளுத்கம சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 62 பேர் கைதாகியுள்ளனர். இதேவேளை இங்கு நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பான வீடியோ மற்றும் சீ. சீ. ரி. வி. ஆதாரங்கள் இருந்தால் வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களை கோரியுள்ளனர்.
0 comments :
Post a Comment