அளுத்கமையின் அசம்பாவித்திற்காக கவலை தெரிவிக்கிறார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா!
இலங்கையில் சென்ற வாரம் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் தொடர்பிலும், முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் தொடர்பிலும் உயிரிழந்த மக்களுக்கும், அநாதைகளாக கதியற்றிருப்போருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரத்துங்க தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார்.
பௌத்த மதத்தின் பேரால் தங்களது தனிப்பட்ட கீழ்த்தரமான நோக்கங்களை எடுத்துச் சென்று, கலகக்காரர்களான அடிப்படைவாதிகள் ஒருபகுதியினரால் மேற்கொள்ளப்படுகின்ற, மக்களை உசுப்பேத்துகின்ற ஊர்வலம் மற்றும் மக்கள் சந்திப்பு இந்தத் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகின்ற அவர், இத்தாக்குதல் தொடர்பில் தான் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
18 மாதங்களாக “குரோதத்தை விதைத்து அசிங்கமான முறையில் தாக்குதல் நடாத்துபவர்களை அடக்குதவதற்குரிய சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரிகளால் முடியாதிருந்துள்ளது எனவும் முன்னாள் ஜனாதிபதி தெளிவுறுத்துகின்றார்.
தற்போதைய சூழ்நிலை, இலங்கையில் வாழ்கின்ற அனைத்து இனங்களுக்கும் ஜனநாயக வழிமுறையில் சமமானமுறையில் அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்கு ஏற்புடையதாக இருக்கின்றது என அறிக்கை ஒன்றின் மூலம் அவர் தெளிவுறுத்தியுள்ளார்.
1983 வருடம் ஏற்பட்ட இனவாதப் பிரிவினைவாதத்தை தடுப்பதற்கு அன்றைய அரசு செயற்படாத காரணத்தினால்தான், பெரும்பாலான உயிர்கள் காவுகொள்ளப்பட்டன எனவும், இருபத்தைந்து ஆண்டுகளாக நடந்த போருக்கு அதுதான் அடிப்படையாக அமைந்தது என்பதையும் முன்னாள் ஜனாதிபதி சுட்டிக் காட்டுகின்றார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment