Monday, June 9, 2014

போலியான வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக இணையத்தளம் மூலம் ஒன்றரை கோடி மோசடி: தம்பதி சந்தேகத்தில் கைது

இலங்கை போன்று போலியான இணையத்தளம் ஒன்றை தயாரித்து சுமார் ஒரு கோடியே அறுபது இலட்சம் ரூபா மோசடி செய்த இருவரும், குறித்த போலி இணையத்தளத்தை வடி வமைத்த வரும் பொலிஸாரால் வெள்ளிக்கிழமை கைது செய் யப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன நேற்று கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது வெளியிட்டார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.slbfe.lk என்ற இணையத்தளத்தின் முகப்பு தோற்றமுடைய www.slbflanka.com என்ற இணைத்தளத்தை உருவாக்கி அதில் கொரியா வேலை வாய்ப்புகள் குறித்து தகவல்களை வெளியிட்டு போலி தொலை பேசி இலக்கங்களையும் இவர்கள் வெளியிட்டு உள்ளனர். குறித்த தொலைபேசி இலக்கத்தினூடாக சிலர் தொடர்பு கொண்டு கொரியா வேலைவாய்ப்பு தொடர்பில் தகவல்கள் கேட்டதனைத் தொடர்ந்து ஒரு வங்கிக் கணக்கினை வழங்கி அதில் ஒரு தொகை பணம் வைப்புச் செய்யுமாறு வேண்டப்பட்டுள்ளனர். அவ்வாறு பணம் வைப்பு செய்து அதற்கான பற்றுச் சீட்டுகள் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள சந்தேகநபரின் அலுவலகத்துக்கு அனுப்புமாறும் கேட்டுள்ளனர். பற்றுச்சீட்டு அனுப்பட்ட பின்னர் அனுப்பியவிரின் பெயர் இந்த இணையத்தளத்தில் கொரியா வேலைவாய்ப்புக்கு செல்ல தகுதியுடையவர் என வெளியிடப்பட்டிருந்ததுடன் மேலதிக பணமும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

சுமார் இரண்டு, மூன்று மாதங்களாக இடம்பெற்று வந்த இம்மோசடியுடன் தொடர்புடைய சந்தேகநபர்களான பாணந்துறைப்பிரதேசத்தைச் சேர்ந்த தற்போது தெஹிவளையில் தற்காலிகமாக வசித்து வந்த தர்ஷன உதான (மொஹமட் வசீம்) மற்றும் அவரது மனைவி சித்தி தம்ஜா நிலாம்தீன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து சுமார் 60,97,000 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த இணையத்தளத்தை 50,000 ரூபாவுக்கு வடிவமைத்து கொடுத்த ரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த தரங்க பெரேரா என்பவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த மோசடிக்கு உதவியாக இருந்த துஷாரி கிங்ஸ்டன் தில்ஹானி என்ற பெண் மோசடி செய்யப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபாவுடன் இத்தாலிக்கு தப்பியோடியுள்ளமை விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளதாகவும் இவரைக் கைது செய்வது தொடர்பில் சர்வதேச பிடியாணை பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் மேலும் அவர் தெரிவித்தார். இணைத்தளங்களில் இவ்வாறான மோசடிகள் தொடர்பில் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு ஊடகப்பேச்சாளர் மக்களை கேட்டக் கொண்டார். குறித்த போலி இணையத்தளத்தினுடாக தமது பணத்தை இழந்தவர்கள் பொலிஸ் குற்றத் தடுப்பில் இன்று முதல் வந்து முறைப்பாடுகளை செய்யுமாறு வேண்டிக் கொண்டதோடு அல்லது 0112320145 என்ற தொலைபேசி இலக்கத்தினுடாக தொடர்பு கொண்டு அறியப்படுத்துமாறு மக்களிடம் கேட்டுக் கொண்டதுடன். இந்த போலி இணையத்தள முகவரி தற்போது முடக்கப்பட்டுள்ளதாவும், www.slbfe.lk என்பதே இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் எனவும் அவர் தெரிவித்தார். சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதக மேலும் அவர் தெரிவித்தார்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com