பத்திரகாளி அம்மனுக்கு பூ தூவிய ஜனாதிபதியின் ஹெலிகள் ! ! (படங்கள்)
மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய புனராவர்த்தன பஞ்சகுண்ட அஷ்டபந்தன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக நிகழ்வு நேற்று காலை 09.00 மணிக்கு இடம்பெற்றது. இவ் ஆலய நிகழ்வானது கடந்த 2ம் திகதி ஆலய ஆரம்ப கிரியை பூசைகளுடன் ஆரம்பமாகி, 6ஆம் 7ஆம் திகதிகளில் அம்பாளுக்கு எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வுகள் இடம்பெற்றது. இதனை தொடர்ந்து நேற்று காலை 09.00 மணிக்கு சுப வேளையில் ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வுகள், திருப்பழுகாமம் மாவேற்குடா பிள்ளையார் ஆலய பிரதிட்டா பிரதம குரு சிவஸ்ரீ சு.கு.விநாயகமூர்த்தி குருக்கள் தலைமையில் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் விஷேட நிகழ்வாக மாண்புமிகு இலங்கை ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க கிழக்கு 23ம் படை தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேரா, மட்டக்களப்பு விமான படை தளபதி குருப் கேப்டன் பிரியதர்சன மற்றும் முன்னாள் மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன் ஆகியோரின் ஆலோசனையோடு இலவசமாக உலங்கு வான் ஊர்தி வழங்கப்பட்டு, ஆலய கோபுரத்துக்கு கும்பாபிஷேகத்தின்போது வானில் இருந்து மலர்கள் சொரியப்பட்டது.
இந்நிகழ்வில் பெருமளவான பக்த அடியார்கள் கலந்து கொண்டமை சிறப்பு அம்சமாகும். தொடர்ந்து 12 நாட்களுக்கு மண்டலாபிஷேக பூசைகள் இடம்பெற்று 19ஆம் திகதி 1008 சங்காபிஷேக பூசைகள் இடம்பெறும். ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் 22ஆம் திகதி திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி 25ஆம் திகதி புதன்கிழமை கல்யாணக்கால் வெட்டும் வைபவம் இடம்பெற்று, 27ஆம் திகதி வெள்ளிக் கிழமை மாலை 04.00 மணிக்கு இடம்பெறும் தீ மிதிப்பு வைபவத்துடன் ஆலய நிகழ்வுகள் நிறைவு பெறும்.
0 comments :
Post a Comment