“சதொச” திருட்டு தொடர்பில் விரல் ரேகை அமைச்சர் ஜோன்ஸ்டனின் செயலாளரின் விரல் ரேகையுடன் ஒத்துப் போகிறது…!
சென்ற 2012 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி கொம்பனித் தெரு சதொச தலைமையக நிதி மற்றும் கணக்கியல் பிரிவின் அலுவலகத்திற்குச் சொந்தமான கண்ணாடிக் கதவு ஒன்றினை உடைத்து நட்டம் ஏற்படுத்தியது தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட ஆய்வுகளின் போது, அவர்களுக்கு கிடைத்துள்ள விரல் ரேகை (அடையாளம்) கூட்டுறவு உள்நாட்டு வணிக அமைச்சரின் செயலாளரின் விரல் ரேகையுடன் ஒத்திருப்பதாக தெளிவாகியுள்ளது.
குற்றச் செயல் இடம்பெற்றுள்ள இடத்திலிருந்து பெறப்பட்ட மூன்று ரேகைகள் அமைச்சரின் செயலாளரான ஜொஹென் நாணக்காரவின் விரல் ரேகையுடன் ஒத்துவருவதாக பொலிஸார் கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகேவிடம் அறிவித்துள்ளனர்.
அதற்கேற்ப, இம்மாதம் 30 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு ஆஜராகுமாறு அவருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் குறிப்பிட்ட சந்தேக நபர் குற்றச் செயலொன்றுடன் தொடர்புற்றிருந்ததனால் அவருடைய விரல் அடையாளத்தை பொலிஸார் வைத்திருந்தனர். தற்போது அவ்வடையாளத்துடன் குறித்த குற்றச் செயல் நிகழ்ந்த இடத்திலிருந்து பெறப்பட்ட விரல் அடையாளமும் ஒத்து வருவதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு தெளிவுறுத்தியுள்ளனர்.
(கேஎப்)
0 comments :
Post a Comment