பால்மாவுக்கான இறக்குமதி வரி ரூபா 25 ஆல் அதிகரிப்பு… பால்மாவின் விலையைக் கூட்டுவதற்கு நிறுவனங்கள் தீர்மானம்…!
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப் படுகின்ற பால்மா கிலோ ஒன்றிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரி, ரூபா 25 ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த இறக்குமதி வரியானது இன்றிலிருந்து நடைமுறைக்கு வருகின்றது என திரைசேறி அறிவித்துள்ளது.
இதுவரை ரூபா 57 என குறிக்கப்பட்டிருந்த இறக்குமதி வரியானது புதிய வரி அதிகரிப்பின் காரணமாக ரூபா 82 ஆக உயர்ந்துள்ளது.
எவ்வாறாயினும், இதுபற்றி பால்மா நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு விசாரித்தபோது, பால்மாவுக்காக வரி அதிகரிப்போடு பால்மாவின் விலையிலும் அதிகரிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது எனக் குறிப்பிட்டன.
(கேஎப்)
0 comments :
Post a Comment