போர்க்குற்ற விசாரணைக்கு உதவி நல்குவோருக்கு நாம் பாதுகாப்பளிப்போம்! - அமெரிக்கா
இலங்கைக்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ள போர்க்குற்ற விசாரணைக்குழுவினருக்கு சாட்சி வழங்கும் நபர்களுக்கு அமெரிக்கா பாதுகாப்பு வழங்கும் என தென் மற்றும் மத்திய ஆசியாவுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் உதவி அரச செயலாளர் அதுல் கேஸ்ட் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் இலங்கைக்கு வந்திருந்தபோது, தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்தவேளையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக பிரேரணை கொண்டு வந்த்து அமெரிக்கா என்பதால் அதற்கு சாட்சியமளிப்பவர்களைப் பாதுகாப்பு தமது நாட்டின் கடமை எனவும் உதவிச் செயலாளர் அங்கு தெரிவித்துள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment