Saturday, June 7, 2014

அரை மணித்தியாலயத்தில் தேர்தல் முடிவுகளை வெளியிடும் உபகரணம் மொரட்டுவ பல்கலைக்கழகத்தினால்….!

தேர்தல்களின் போது வாக்குகளை எண்ணி, அரை மணித்தியாலம் செல்வதற்கு முன்னர் தேர்தல் முடிவுகளை வெளியிடக்கூடிய இயந்திரமொன்றை மொரட்டுவ பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் மாணவர்களும் சேர்ந்து உருவாக்கியுள்ளபோதும், அவ்வியந்திரத்தை இலங்கையின் தேர்தல்களுக்குப் பயன்படுத்தப்படுவதில்லை என அமைச்சர் தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டார்.

பிலியந்தலை - கூட்டுறவு நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில் -

“இலங்கையில் நடைமுறையில் உள்ள தேர்தல்களின் போது, வாக்குகளை எண்ணுவதற்கு பல கோடி ரூபாய்கள் விரயமாகின்றன. பல நாட்கள் தூக்கம் விழித்து எங்கள் அதிகாரிகள் வாக்குகளை எண்ணுகின்றார்கள். இருந்தபோதும் வெளியிடப்படுகின்ற தேர்தல் முடிவுகளில் சந்தேகம் எழுகின்றது. ஆனால், இயந்திரத்தின் மூலம் வெளியிடப்படுகின்ற முடிவுகளில் குறைசொல்லவோ, சந்தேகிக்கவோ யாராலும் முடியாது. அந்த இயந்திரத்தில் யாரேனும் கையை வைத்தால் அது செயலிழந்து விடும். ஆகவே, இந்தியாவைப் போல, ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பற்கும், கோடிக் கணக்கான ரூபாய்களை சேமிப்பதற்கும் இந்த உபகரணம் உபயோகிக்கப்பட வேண்டும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com