மனித உரிமைகளை பாதுகாப்பதில் இலங்கை மிகவும் உயர்ந்த நிலையில் இருக்கின்றது! குவைட்
இலங்கை மனித உரிமைகளை பாதுகாப்பதில் மிகவும் உயர்ந்த நிலையில் இருப்பதாக, குவைட் பாராளுமன்ற த்தின் பிரதி சபாநாயகர் தெரிவித்துள்ளார். குவைட் பிரதி சபாநாயகர் முபாறப் அல் குரய்னி, பிரதி சபாநாயகர் சந்திம வீரகொடி ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.
எதிர்காலத்தில் இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பெற்றுக் கொடுப்பதற்கு, உரிய ஏற்பாடுகளை மேற்கொள்வதாக, இச்சந்திப்பின்போது, குவைட் பிரதி சபாநாயகர் தெரிவித்தார். இருவரும் பரஸ்பரம் நினைவுசின்னங்களையும் பரிமாறிக்கொண்டனர். பிரதி சபாநாயகர் முபாறக் அல் குராய்னி, இலங்கை பாராளுமன்றத்தின் வனப்பு மற்றும் அதன் அமைப்பினையும் பார்வையிட்டார்.
0 comments :
Post a Comment