பாம்புப் பெண்ணுக்கு பிரசவம்; பொலிஸ் பாதுகாப்பு வாபஸ் !!
'பாம்புப் பெண்' என அறியப்பட்ட, கொள்ளுப்பிட்டி களியாட்ட விடுதியில் இரவு நேர நடனப் பெண்ணாகப் பணியாற்றிய நிரோஷா விமலரத்ன (டிலானி) என்பவர், பிரசவத்துக்காக அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இவர் தங்கியுள்ள வாட்டுக்கு இன்று (06) பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில் சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் அந்த பாதுகாப்பு வாபஸ் பெறபட்டுள்ளது. ஊடகவியலாளர்கள் மற்றும் ஏனைய நபர்கள் அநாவசியமாக குறித்த வாட்டுக்குள் பிரவேசிக்கக் கூடாது என்பதற்காகவே இந்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
இதற்காக இரு கான்ஸ்டபிள்கள் பாதுகாப்பு கடமையில் ஈடபட்டிருந்த நிலையில் சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் அவ்விருவரும் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளனர் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்றாம் திகதி இவர் பிரசவத்துக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என்று வைத்திசாலை தகவல்கள் மேலும் கூறின.
பாம்பொன்றை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இப்பெண்ணுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment