ரணில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதைத் தெரிந்து.. சந்திரிக்கா நாட்டை விட்டுப் போகிறார்….(?)
ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிடுவது தொடர்பில் பல்வேறு பேச்சுவார்த்தைகளில் பங்குகொண்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரத்துங்க அவசரமாக இங்கிலாந்து பயணித்து, அங்கு இரண்டு மாதங்கள் இருப்பதனால் பேச்சுவார்த்தை பிரச்சினைக்குரியதாக மாறியதுள்ளதாகத் தெரியவருகின்றது.
முன்னாள் ஜனாதிபதிக்கும் பொது அபேட்சகராக நிற்க வேண்டுமென்ற தேவையிருந்தாக அவருடன் நெருங்கிய தகவல்கள் இதற்கு முன்னர் ஊர்ஜிதமாகின.
இதற்கு முன்னர் நடைபெற்ற இரகசிய கலந்துரையாடல் ஒன்றின்போது, தன்னால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலரை சேர்த்துக் கொள்ளும் திறமை இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் அரசியலுக்கு வருவதற்கு உத்தேசித்திருக்கின்ற அவர், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முன்வந்திருப்பதிருப்பதனால் இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறுவதாக அரசியல் ஆய்வாளர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
(கேஎப்)
0 comments :
Post a Comment