“ஆறுகள் கக்கிடும்” அபாயம் பற்றி எச்சரிக்கை விடுகிறது அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்!
இன்னும் 24 மணித்தியாலங்களுக்குள் 100 மில்லி மீற்றரிலும் மேலாக மழை பெய்ந்தால் பல ஆறுகள் கக்கக் கூடிய அபாய நிலை இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவிக்கிறது. களுகங்கை, குகுலே கங்கை, ஜின்கங்கை, பெந்தர கங்கை, நில்வளா கங்கை என்பவற்றில் தற்போது நீர்மட்டம் எல்லையை அடைந்துள்ளதாகவும் அந்நிலையம் அறிவிக்கிறது.
அவ் ஆறுகளை அண்மித்த தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களைக் கேட்டுள்ளது.
(கேஎப்)
0 comments :
Post a Comment