பந்தை எட்டி எட்டி உதைத்த குட்டி இளவரசர் !! (படங்கள்)
இங்கிலாந்தின் குட்டி இளவரசர் ஜார்ஜ் ஆர்வமுடன் கால் பந்தா ட்டத்தை விளையாடியது அனைவரையும் ரசிக்க வைத்தது. இங்கிலாந்து நாட்டில் கிளவுசெஸ்டர்ஷைர் பகுதியில் சைரன் செஸ்டர் பார்க் போலோ என்ற சங்கத்தின் போலோ விளை யாட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் ஹாரி ஆகியோர் தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்ட வேண்டி, எதிர் எதிர் அணிகளாய் பங்கேற்றுள்ளனர்.
போட்டியை பார்த்து ரசிக்க வில்லியம்சின் மனைவி கேட், குட்டி இளவரசர் ஜார்ஜுடன் வந்திருந்தனர். அப்போது மைதானத்தில் இறங்கிய ஜார்ஜ், அங்கிருந்த கால்பந்து ஒன்றை வைத்து கொண்டு ஆர்வத்துடன் விளையாட தொடங்கி யுள்ளான். தனக்கு கிடைத்த கால்பந்தை தனது இடது காலால் தட்டி விட்டு மிகுந்த பரவசமடைந்துள்ளான்.
மேலும் அங்கிருந்த போலோ விளையாட்டில் பயன்படுத்தப்படும் போலோ கம்பை கையில் எடுத்த ஜார்ஜ், அதனை பயன்படுத்த தெரியாததால் தன் தாய் கேட்டின் கையை பிடித்து கொண்டான்.இந்த விளையாட்டை கண்டுகளிக்க இங்கிலாந்து ராணி எலிசபெத் மற்றும் எடின்பர்க் அரசர் பிலிப்பும் வருகை தந்திருந்தனர்.
0 comments :
Post a Comment