யாழ்.குடாநாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய விமானம்.. (படங்கள்)
யாழ்.குடாநாட்டில் வேவு நடவடிக்கைகளினில் ஈடுபட்டதாக கூறப்படும் ஆட்கள் அற்ற விமானமொன்று கைப்பற்றப் பட்டுள்ளது. யாழ்.நகரிலுள்ள விடுதியொன்றின் மேற்கூரையினி லிருந்து மீட்கப்பட்ட அந்த விமானம் தற்போது யாழ். பொலிஸார் வசமுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இது எந்த நாட்டினது விமானமென இதுவரை அடையாளம் காணப்படவில்லை. எனினும் இது இலங்கை விமானப்படைக்கு சொந்தமானதென்ற தகவல்கள் ஏதும் கிட்டியிருக்கவில்லை.
விடுதி நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட தகவலையடுத்தே இது மீட்கப்பட்டதாக மேலும் தெரியவருகின்றது. வேவு நடவடிக்கைகளிற்கு பயன்படுத்த குறித்த வேவு விமானம் செயலிழந்து கீழே வீழ்ந்திருக்கலாமென நம்பப்படுகின்றது. தயாரிப்பு வகைகள் அடிப்படையில் இது சீன நாட்டினதாக இருக்கலாமென மற்றொரு தகவல் கூறுகின்றது. மேலதிக தகவல்களிற்காக இலங்கை விமானப்படையினது உதவி நாடப்பட்டுள்ளதாகவும் அத்தகவல் மேலும் தெரிவிக்கின்றது.
0 comments :
Post a Comment