பேஸ்புக்கில் மலர்ந்த காதலால் 63 வயதான நபரை கரம் பிடித்த 17 வயது சிறுமி !!
63 வயதான பேஸ்புக் காதலனை கரம் பிடித்த 17 வயதான சிறுமி ஒருவர் தொடர்பிலான தகவல்கள் மொரட்டுவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. சமூக வலைத்தளமான பேஸ்புக் ஊடாக 60 வயதான வயோதிபர் ஒருவருக்கும் 14 வயதான சிறுமி ஒருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. சுமார் மூன்றாண்டுகள் இவர்களது காதல் உறவு பேஸ்புக் ஊடாக தொடர்ந்துள்ளது. அதன் பின்னர் குறித்த சிறுமி, பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக வீட்டை விட்டு வெளியேறி இந்த வயோதிபருடன் குடும்பம் நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வயோதிபர் தமது பெயர் மற்றும் வயதை மறைத்து சிறுமியை ஏமாற்றியுள்ளார். அண்மையில் கண்டி நகரில் முதல் தடவையாக ஒருவருக்கு ஒருவர் சந்தித்து கொண்டதாகவும், வயோதிபருடன் சிறுமி சென்றுவிட்டதாகவும் தெரிவிக்க ப்படுகிறது. இது தொடர்பில் சிறுமியின் பெற்றோர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். எனினும், சிறுமி, வயோதிப காதலனை விட்டு விலகி வர மறுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
0 comments :
Post a Comment