Wednesday, June 11, 2014

பாடசாலை தரம் ஒன்று பாலகனை முழங்காலில் நிற்க வைத்து காலால் தாக்கினார் அதிபர்!

நிக்கவரெட்டிய கொபய்கனே பிரதேசத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் நான்கில் கல்வி கற்கும் மாணவனொருவனை, அப்பாடசாலையின் அதிபர் தாக்கியதாக மாணவனின் பெற்றோர் கொபய்கனே பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

தற்போது குறித்த சிறுவன் நிக்கவரெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

தனது பிள்ளை பாடசாலைக் காலைக் கூட்டத்தின் போது தவறொன்று செய்ததற்காக முழங்காலில் நிற்க வைத்து, காலால் தாக்கியதாக பிள்ளையின் பெற்றொர் பொலிஸில் முறைப்பட்டுள்ளனர்.

இது இவ்வாறிருக்க, பாடசாலை அதிபர் இது தொடர்பாக கருத்துரைக்கும் போது, அவ்வாறு தான் தாக்கவில்லை எனவும், காலைக் கூட்டத்தின்போது மரியாதையின்றி சத்தமிட்ட இரு மாணவர்களுக்கு கையால் மட்டுமே தான் இரண்டு அடிகள் அடித்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

1 comments :

Anonymous ,  June 12, 2014 at 9:52 AM  

Some teachers including the heads of the schools have a brutal mentality of hitting the children
left and right for minor reasons.These brutal assults have a long long history.Why not they learn a lesson from the sytem of the schools of western countries Or do they want to stay in the dark ages.Do they think that they are the masters of the slaves.This brutal mentality of the past should be wiped out immediately.The teachers have to learn what is "Human psychology"

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com