உங்களுக்கு யாரேனும் உதவிசெய்தால் “தேங்க்யூ” சொல்ல வேண்டாம்! - துமிந்த
யாரேனும் ஒருவர் உங்களுக்கு உதவி செய்தால் அவருக்கு Thank-you சொல்ல வேண்டாம் என அமைச்சர் துமிந்த திசாநாயக்க குறிப்பிடுகிறார்.
“நாங்கள் யாரிடமேனும் ஏதேனும் உதவி பெற்றுக் கொண்டால் Thank-you என்று சொல்லவும் நன்றி சொல்லவுமே தெரிந்து வைத்திருக்கிறோம். இல்லாவிட்டால் நாங்கள் யாரேனும் ஒருவருக்கு உதவி செய்வது அவரிடம் இருந்து ஏதேனும் எதிர்பார்த்தே…
யாரேனும் உங்களுக்கு உதவி செய்தால் அவருக்கு நீங்கள் Thank-you சொல்லாமல், இன்னும் ஐந்து பேருக்கு நீங்கள் உதவி செய்யுமாறு நான் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். இதனை சமூகமயப்படுத்துவதே எனது குறிக்கோளாக இருக்கின்றது.
இப்போது நான்கூட யாரேனும் எனக்கு Thank-you என்று சொல்லும்போது, நான் அவரிடம் நீங்கள் ஐந்து பேருக்கு உதவி செய்யுங்கள் என்றே சொல்கிறேன். அப்போது எங்களுக்கு Thank-you சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. இதனை நாளையோ நாளை மறுநாளையோ நான் புது முறையில் நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளேன்” என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment