கல்முனைக்குடி வீட்டில் திருடுவதற்கு முயன்ற காத்தான்குடி பொலிஸ் உத்தியோகத்தர் கைது !
கல்முனை பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள கல்முனைக்குடி பிரதேசத்தில் உள் வீடு ஒன்றில் பணத்தை கொள்ளையிட்ட தாகக் கூறப்படும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை நேற்று புதன்கிழமை அதிகாலை கைது செய்துள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர். இதுபற்றி தெரியவருவதாவது,
கல்முனைக்குடி தைக்காநகர் வீதியில் உள்ள வீடு ஒன்றில் சம்பவதினமான நேற்று புதன்கிழமை அதிகாலை 5.00 மணியளவில் பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு செல்லும் போது வீட்டை திறந்துவைத்துள்ள நிலையில் இவர் வீட்டுக்குள் புகுந்து பணத்தை திருட முயன்ற வீட்டின் உரிமையாளர்கள் சத்தமிட்டதையடுத்து அயலவர்களால் இவர் மடக்கிப்பிடித்து நையப்புடைந்தனர்.
இதனையடுத்து 119 பொலிஸ் அவசரசேவைக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் இவரைக் கைது செய்து விசாரித்த போது காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் 40 வயதுடைய சாய்ந்தமருதைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் என ஆரம்பவிசாரணையில் தெரியவந்துள்ளது .
இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக கல்முனை பொலிஸார் விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.
0 comments :
Post a Comment