ஆளும் கட்சி வீழ்வதற்கான காலம் வெகுதூரத்தில் இல்லை! - அநுர
நடைபெற்று முடிந்த மாகாண சபைத் தேர்தலில் நாட்டுமக்கள் புதிய பாதையைக் காண்பித்துள்ளதாகவும், அதற்கு இடம் கொடுக்காமல் ஆளும் கட்சியைச் சேர்ந்த இருவர் இருக்கின்றனர் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க குறிப்பிட்டார்.
மாத்தைறையில் புதிய கட்சி அலுவலகத்தைத் திறந்து உரையாற்றும்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
“எதிர்வரும் தேசிய தேர்தலில் ஆளும் கட்சியை விரட்டி விட முடியும் என சைகை மூலம் அவர் காட்டினார்.
நாய் இறக்கும்போது தேள்களும் சாகின்றன. அதனால் தேள்கள் தட்டுத் தடுமாறுகின்றன. நாயின் உடல் சூட்டின் காரணமாகவே தேள்கள் வாழ்கின்றன. அவ்வாறு அரசாங்கத்தைக் கவிழ்க்க முடியும் என்ற குறியீடு கிடைக்கும்போது அரசாங்கத்திலுள்ள தேள்கள் தானாக அங்கலாய்க்கும்.
தேர்தல் முடிவும் ஆளும் கட்சி வீழ்வதைச் சுட்டிக் காட்டுகின்றது. பொதுமக்கள் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதை நீக்குவதற்காக பல்வேறு சூழ்ச்சிகள் விளங்காமலேயே நடைபெற்று வருகின்றன.
அரசாங்கத்தின் உள்ளே உள்ள தேசாபிமானிகள் என்று தங்களைத் தாங்களே சொல்லிக் கொள்ளும் இருவர், வாக்குகளைப் அவர்கள் பக்கம் இழுத்துக் கொள்வதற்காக சூழ்ச்சிகள் செய்துவருகின்றார்கள்
தற்போது இந்த அரசாங்கம் ரிகேனின் இலங்கை செயற்றிட்டத்தை அமுல்படுத்தி வருவதாகச் சொல்கிறது. இன்று கனவில் இவர்கள், இப்போது உள்ளது மகிந்த சிந்தனையல்ல ரீகேனின் சிந்தனையே உள்ளது என்று சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். இவ்வாறு இவர்கள் வாய்பிதற்றுவதற்குக் காரணம் வேறொன்றுமல்ல தேர்தல் முடிவே” எனவும் அவர் குறிப்பிட்டார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment