இடிதாங்கியை திருடமுயன்ற பிரதேச சபை உறுப்பினர் கைது!
இடிதாங்கியை திருடமுயன்ற பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊவா பரணகம டவுன்சைட் தோட்டத்தில் மூடப்பட்டிருக்கின்ற தேயிலைதொழிற்சாலையில் பொருத்தப்பட்டிருக்கும் இடிதாங்கியை திருடமுயன்ற போதே வெலிமடை பிரதேச சபையின் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினரை கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரித்தார்.
அவருடன் மற்றுமொருவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக ஊவா பரணகம பொலிஸார் தெரிவித்தனர். அந்த தோட்டத்தின் காவலாளிக்கு பெருந்தொகையில் இலஞ்சம் கொடுத்து இடிதாங்கியை கழற்றிச்செல்வதற்கு முயன்றுள்ளார். இது தொடர்பில் காவலாளி, அத்தோட்டத்தின் முகாமையாளருக்கு தகவல்கொடுத்துள்ளார். இதனையடுத்தே தோட்ட முகாமையாளர் முச்சக்கரவண்டியுடன் அவ்விருவரையும் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment