நடுநிலையாக சிந்திக்கக்கூடிய சோபித்த தேரர் மட்டுமே பொது அபேட்சகராக நிற்பதற்குத் தகுதிவாய்ந்தவர்!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது அபேட்சகராக நிறுத்துவதற்கு அனைவரினதும் விருப்பு மாதுலுவாவே சோபித்த தேரரின் பக்கமாகவே உள்ளது என என ஐக்கிய பிட்சுக்கள் முன்னணியின் பிரதான போதகரும் ஸ்ரீலங்கா ராமஞ்ஞ மகா நிகாயவின் போதகருமான கிராம்பே ஆனந்த தேரர் குறிப்பிடுகிறார்.
எவ்வாறாயினும், சோபித்த தேரர் பொது அபேட்சகராக நிற்பதற்க மறுப்புத் தெரிவித்தால் நாட்டு மக்கள் அனைவரும் விரும்புகின்ற ஒருபக்கம் சாயாத ஒருவரை நிறுத்துவதற்கு பௌத்த மத உயர்பீடம் முன்வரும் எனவும் அவர் குறிப்பிடுகிறார்.
தற்போதைய அரசாங்கத்துடன் தனித்தனியாக தேர்தலில் களம் குதிக்க முடியாமையினால் அனைவரும் ஒன்றிணைந்து பொதுவான ஒரு அபேட்சகரை நிறுத்தி, அவரை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிவாகை சூடச் செய்து, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்காக ஆவன செய்யப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெளிவுறுத்துகின்றார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment