முகாமிலுள்ள மரத்தில் தொங்கிய நிலையில் இராணுவ வீரரின் சடலம் மீட்பு! – காரைதீவில் சம்பவம்!
முகாமிலுள்ள மரமொன்றில் தொங்கிய நிலையில் இராணுவ வீரரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அம்பாறை, காரைதீவு படை முகாமிலிருந்து இராணுவ வீரர் ஒருவர், இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த முகாமிலுள்ள மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையிலேயே இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று சம்மாந்துறை பொலிசஸார் தெரிவித்தனர்.
கண்டி, கட்கஸ்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சமன் குமார என்பவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார். இவர், காரைதீவு 3ஆவது விஜயபாகு படையணியின் பணியாற்றி வந்தார்.
இவரது மரணத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. சம்மாந்துறை பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment