விடுதலைப் புலிகளால் மாணவர்கள் கடத்தப்பட்ட சம்பவங்களுக்கு இணையானது நைஜீரிய சம்பவம்!
பொகோ ஹரம் தீவிரவாதிகளால் நைஜீரிய மாணவிகள் கடத்தப்பட்ட சம்பவத்திற்கு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் நைஜீரிய ஜனாதிபதி குட்லக் ஜொனதனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், இக்கடத்தல் சம்பவமானது, தமது நாட்டில் விடுதலைப் புலிகளால் மாணவர்கள் கடத்தப்பட்ட சம்பவங்களுக்கு இணையானது என, தெரிவித்துள்ளார்.
மாணவிகள் கடத்தப்பட்டமை தமக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி, இச்சம்பவமானது பயங்கரவாதம் உலகிலிருந்து ஒழிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை, சுட்டிக்காட்டியுள்ளார். கடத்தப்பட்ட மாணவிகள், எதுவித பாதிப்புமின்றி மீட்கப்படுவார்கள் என தமக்கு நம்பிக்கையிருப்பதாகவும், ஜனாதிபதி தெரிவித்தார்.
இதேவேளை, தென்னாபிரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜாகொப் சூமாவிற்கு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்க ஜனாதிபதி தேர்தலில், ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜாகொப் சூமா, பெரு வெற்றிபெற்றார். இவ்வெற்றியானது, இலங்கைக்கும், தென்னாபிரிக்காவிற்குமிடையில் உறவுகளை கட்டியெழுப்புவதில் பெரும் உந்துசக்தியாக அமையுமென, ஜனாதிபதி தனது வாழ்த்து செய்தியில், தெரிவித்துள்ளார். 1994ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், தென்னாபிரிக்க விடுதலை போராட்ட வீரர் நெல்சன் மண்டேலா வெற்றிபெற்றதன் பின்னர், இலங்கையுடனும், இந்தியாவுடனும் இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டமை, குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment