எனது மகனின் மரணத்திற்கு காரணம் சுகாதார ஊழியர்கள்தான்! - மரணமான சிறுவனின் தாயார்!
எனது மகனின் மரணத்திற்கு காரணம் சுகாதார ஊழியர்கள்தான் என, மஹரகம பகுதியில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்படிருந்து மரணமான 14 வயது சிறுவனின் தாயார் குற்றம் சுமத்தியுள்ளார். தமது மகனை ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்க சென்ற வேளை சுகாதார ஊழியர்கள் அசமந்தப்போக்குடன் செயற்பட்டதாகவும் சுகாதார ஊழியர்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் தமது மகன் உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஷவிந்திர கமகே கருத்து தெரிவிக்கையில், குறித்த சிறுவன் சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்ட சந்தர்ப்பத்தில் தாதியர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்ததாக கூறினார்.
இதனால் சிறுவனை தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்குமாறு கடமையிலிருந்த வைத்திய அதிகாரிகள் ஆலோசனை வழங்கியிருந்தாகவும் பணி பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் கையாளக்கூடிய உரிய நடவடிக்கையினையே வைத்திய அதிகாரிகள் பின்பற்றியிருந்தாகவும் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஷவிந்திர கமகே மேலும் சுட்டிக்காட்டினார்.
0 comments :
Post a Comment