எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்களிடமிருந்து அடையாள அட்டைகள் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து ஐ.நா. தீவிர விசாரணை!
மலேசியாவில் கைது செய்யப்பட்ட எல்.ரி.ரி.ஈ உறுப்பினர் களிடமிருந்து சர்வதேச அகதிகளுக்கான ஆணையாளர் அலுவலகத்தினால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகள் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து, அவ்வலுவலகம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
மலேசியாவில் கைது செய்யப்பட்ட எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்கள், ஐக்கிய நாடுக்ள அகதிகளுக்கான ஆணையாளர் அலுவலகத்தினால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை பயன்படுத்தி, பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடபட்டு வந்துள்ளதாக, மலேசிய பொலிஸார் அவ்வலுவலகத்திற்கு அறிவித்துள்ளனர்.
இவ்வாறு அடையாள அட்டைகளை வழங்கியுள்ள மலேசியாவில் னஉள்ள சகல அகதிகள் தொடர்பாகவும் விசாரணை நடாத்துவதற்கு, ஐ.நா. அகதிகளுக்கான ஆணையாளர் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அவ்வலுவலகத்தின் ஊடகப்பேச்சாளர் தகவல் தருகையில், சர்வதேச ரீதியில் பாதுகாப்பு தேவைப்பட்டவர்களுக்கு மாத்திரமே இவ்வலுவலகத்தில் புகலிடம் வழங்கப்படுகிறது.
யுத்தம் காரணமாக நாடுகளிலிருந்து வெளியேறியவர்கள், கடுமையாக மனித உரிமைகள் மீறப்பட்டவர்கள், சித்திரவதைகளுக்கு உட்பட்டவர்களுக்கு, ஐ.நா. அகதிகளுக்கான ஆணையாளர் அலுவலகத்தினால் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் கோட்பாடுகளுக்கு எதிராக செயற்படுவோர் மற்றும் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு ஒருபோதும் அகதிகள் அந்தஸ்து வழங்கப்பட மாட்டாது என்றும், அவ்வலுவலகத்தின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார். இதனடிப்படையில் மலேசியாவில் கைது செய்யப்பட்ட எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்கள் தொடர்பாக விரிவான விசாரணைகள் நடாத்தப்பட்டு வருவதாக, ஐ.நா. அகதிகளுக்கான அலுவலகம் தெரிவிக்கிறது.
0 comments :
Post a Comment