Tuesday, May 27, 2014

44 ஆண்டுகள் எனும் மைல்கல்லை அடைந்தார் மகிந்தர்!

மஹிந்த ராஜபக்ஷ எனும் சிரேஸ்ட தலைவர், முதல் முறையாக பாராளுமன்றத்தில் பிரவேசித்து இன்றுடன் 44 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளன. 1970 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் திகதி இலங்கை வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த தினமாகும்.

அன்றைய தினத்திலேயே ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய முன்னணி பொது தேர்தலை எதிர்கொண்ட தினமாகும். இத்தேர்தலில் வெற்றி பெற்றுவர்களில் மிக இளம் வயதுடைய ருஹூனு பிரதேசத்தை சேர்ந்த இளம் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆவார். இத்தேர்தலில் இவர் பெலியத்த தொகுதியில் 7 ஆயிரம் மேலதிக வாக்குகளால் வெற்றிபெற்றார்.

ருஹூனை சிங்கம் எனும் நாமத்தினால் அழைக்கப்பட்ட டி.எம்.ராஜபக்ஷவின் நிழலில் வளர்ந்த இவர் அரசியல் பாதையில் ஈடுபட்டு எதிர்காலத்தில் இந்நாட்டை ஐக்கியப்படுத்துவார் என அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் அரசில் அங்கம் வகித்த எவரும் நினைக்கவில்லை.

அன்று முதல் இன்று வரை இடதுசாரி அரசியலில் அழியா தடம் பதித்த ருஹூனையில் உதித்த இந்த மக்கள் தலைவர் அமைச்சராகவும், எதிர்கட்சி தலைவராகவும், பிரதமராகவும் பல்வேறு பதவிகளை வகித்து 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் 6 வது நிறைவேற்று ஜனாதிபதியாக முடிசூடி மக்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பை நிறைவேற்றினார்.

2010 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் 7 வது நிறை|வேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முடிசூடினார்.

இவரின் துணிச்சல்மிக்க தலைமைத்துவம் இல்லாவிட்டால் இலங்கை இன்றும் கூட பயங்கரவாத பீதியுடைய நாடாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. கொடிய யுத்தத்தை நிறுத்தி நாட்டை ஐக்கியப்படுத்தி, சிங்களர் தமிழர் முஸ்லிம் பறங்கியர் என அனைவரும் சுதந்திரமாக வாழும் நாடொன்றை உருவாக்கிய மக்கள் தலைவனுக்கு அன்று பெலியத்த மக்கள் வழங்கிய ஆதரவை போன்று இன்று முழு நாட்டு மக்களும் நாட்டை உயரத்தில் நிறுத்துவதற்கு தொடர்ந்தும் உந்து சக்தி அளித்து வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com