புதையல் தோண்டிய பொலிஸார் எம்மைக் கண்டு எடுத்தனர் ஓட்டம்! - ஞானசாரர்
தொல் பொருள் ஸ்தலமாக குறிப்பிடப்பட்டுள்ள மீகஹஹேன கம்பேதம்மகல பிரதேசத்தில் புதையல் தோண்டப்படுகின்றது என பொதுமக்களால் வழங்கப்பட்ட தகவலையடுத்து, அவ்விடத்தைப் பார்வையிடுவதற்காக சென்றவேளை, அங்கு நின்றிருந்த பொலிஸ் ஜீப் வண்டிகள் இரண்டிலும் ட்ரெக்டர் ஒன்றிலும் அதனுடன் தொடர்புடையோர் அவ்விடத்தை விட்டும் வேகமாகச் சென்றுவிட்டதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடஅத்தே ஞானசாரர் தெரிவிக்கிறார்.
“இப்பிரதேசம் தொல்பொருள் காவற்பகுதி. இக்காட்டுப் பகுதியில் இருக்கின்ற சந்தன மரங்களை வெட்டி அநியாயம் செய்து, கருங்ல்லைச் சிதைத்து, தொல்பொருள் நிலத்தை அழித்திருக்கிறார்கள்”
இந்தக் காட்டிலுள்ள சந்தன மரங்களை வெட்டி, கண்ணி வைத்து கற்பாறைகளை உடைத்து, புதையல் தேடுகின்ற விடயம் பற்றி பொதுமக்கள் பொலிஸாரிடமும் பொறுப்புச் சொல்ல வேண்டிய உயரதிகாரிகளிடமும் சொன்னபோதும், யாரும் கவனத்திற் கொள்ளாமையினாலேயே அவர்கள் பொதுபல சேனாவிடம் சொன்னார்கள். அதனால்தான் நாங்கள் பிரதேசத்தவர்களுடன் சேர்ந்து இப்பகுதிக்கு வந்தோம் எனவும் ஞானசார்ர் குறிப்பிட்டார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment