பச்சை குத்திய பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கோரியதாக நீதிமன்றில் வழக்குத்தாக்கல்!
நேற்று முன்தினம் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் நாடு கடத்தப்பட்டுள்ள பிரித்தானிய தாதியினால் தான் குடிவரவு குடியகல்வு அதிகாரி, பொலிஸ் மாஅதிபர், நீர்கொழும்பு சிறைச்சாலை பிரதம சிறைச்சாலை அதிகாரி உள்ளிட்ட சிலரினால் தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறி, தனக்கு ஒரு கோடி ரூபா நட்டஈடு பெற்றுத் தருமாறு நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
பௌத்த சமயத்திற்கு இழுக்கு உண்டாக்குவதற்காக தான் பச்சை குத்தியிருப்பதாகக் கூறி தன்னைக் கைதுசெய்யப்பட்ட தன்னிடம் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் பாலியல் இலஞ்சம் கேட்டதாகவும், சிறைச்சாலை பெண் அதிகாரி ஒருவர் தன்னிடம் ரூபா 2000 இலஞ்சம் பெற்றுக் கொண்டதாகவும் அவர் நீதிமன்றித்தில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மிரிஹான தடுப்பு முகாமில் தான் தடுத்துவைக்கப்பட்ட போது, தன்னிடமிருந்த மடிக் கணினி, பெறுமதிவாய்ந்த கையடக்கத் தொலைபேசி என்பவற்றையும் கைப்பற்றிக் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
37 வயதுடைய நயோமி மிசெல் கொல்மன் எனும் பெயருடைய பாதிக்கப்பட்டுள்ள பெண், பிரித்தானிய நாட்டு புனருத்தாபன மனோவியல் சுகாதாரத் துறைத் தாதியாவார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment