Sunday, May 4, 2014

பொது அபேட்சகராக என்னாலும் முடியும்! - நந்தமித்ர ஏக்கநாயக்க

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது அபேட்சகராக நிற்பதற்கு தன்னாலும் இயலும் எனவும் அதற்கான சகல தகுதிகளும் தனக்கு இருக்கின்றது எனவும் ஜனாதிபதியின் ஆசிர்வாதம் கிடைக்குமாயின் களத்தில் குதிக்கலாம் எனவும் உயர்கல்வி பிரதியமைச்சர் நந்தமித்ர ஏக்கநாயக்க குறிப்பிடுகிறார்.

அமைச்சரின் வீட்டில் இடம்பெற்ற கூட்டமொன்றிலேயே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அங்கு கருத்துரைக்கும்போது -

“எதிர்வரும் 2016 ஆம் ஆண்டுவரை பாராளுமன்றத்திற்கு காலக்கெடு உள்ளது. அதுவரை ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வ காலப்பகுதி உள்ளது. அக்காலகட்டத்திற்கு முன்னர் ஏதேனும் ஒரு தேர்தல் வரக்கூடிய சாத்தியக்கூறு உள்ளது. எந்தவொரு தேர்தல் வந்தாலும் நாங்கள்தான் வெற்றிபெறுவோம். காரணம் நாங்கள் நிறைவே பொதுமக்களுக்கு பணிகள் ஆற்றியிருக்கின்றோம். ஜனாதிபதியுடன் போட்டியிடுவதற்கு உகந்ததொரு இன்னும் வரவில்லை. ரணில் விக்கிரமசிங்க தற்போதும் அமெரிக்காவில். அவரால் முடியாது என்பதை எங்களுக்கு வெளிப்படையாகவே அவர் காட்டியிருக்கின்றார். ஐக்கிய தேசியக் கட்சியில் இருப்பவர்களுக்கும் அது நன்கு தெரியும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com