Sunday, May 4, 2014

புலிக் கொடிக்கு முற்றுப்புள்ளி வைத்த கனடிய பாடசாலை!

கனடா பாடசாலை எல.ரி.ரி.ஈ புலிகளின் கொடியை தடை செய்துள்ளது. குறித்த கனடா பாடசாலையின் வருடாந்த கூட்டத்தின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் இடம்பெற்ற கூட்டத்திற்கு தரம் 12ஐ சேர்ந்த மாணவர் ஒருவர் பாடசாலைக்கு புலிக்கொடியை எடுத்துச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பாடசாலையின் அதிபரினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை, கனடா அரசாங்கம் 2006ஆம் ஆண்டு தீவிரவாத இயக்கமாக அறிவித்துள்ளது.

2 comments :

Anonymous ,  May 4, 2014 at 9:13 PM  

எந்த ஒரு பகுதறிவும் இல்லை, படிப்பறிவும் இல்லை, வேலை வட்டியும் இல்லை அகதியாக வந்ததிலிருந்து தங்களுக்குள் ஒரு வட்டத்தை போட்டுகொண்டு, வெளியுலம் தெரியாமல் வாழ்ந்து, இருந்த சொற்ப அறிவையும் இழந்து மனித முண்டங்களாக வாழும் புலம் பெயர் தமிழர்களை நினைக்கும் போது கவலையாக உள்ளது.
ஒட்டுமொத்த தமிழனத்தின் மண்டைகள் கழுவப்பட்டு, வீணாக மழுங்கடிக்கப்பட்டு விட்டன.

arya ,  May 5, 2014 at 11:53 AM  

இவர்கள் தான் பொழுது போக்குக்கு " ரமில் ஈழம் " கேட்பவர்கள் , சுக போக வாழ்கை வாழ்வதற்காக இலங்கையில் பிரச்சனை இருப்பதாக கூக்குரல் இடுபவர்கள்.இங்கு உள்ள மக்களின் வாழ்க்கை இவர்களின் செயலால் பாதிக்க படுகின்றது , வருடம் ஒரு முறை தம் வெள்ளை கார ஆண் நண்பர்களுடன் சேர்ந்து இலங்கை வந்து கூத்தடித்து விட்டு , வயிறு முட்ட இலங்கை அருஞ்சுவை உணவுகளை சுவைத்து விட்டு செல்வார்கள் , பின் புலி கோவணத்தை பிடித்து ஊர்வலம் போவர்கள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com