மாணவியின் தலைமயிரை விருப்பத்துக்கு மாறாக கத்தரித்த இரு ஆசிரியைகள் பொலிஸாரால் கைது !!
வத்தேகம பொலிஸ் பிரிவிலுள்ள பாடசாலையொன்றைச் சேர்ந்த இரு ஆசிரியையைகள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த பாடசாலை யில் 6 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியின் தலை மயிரை அவரது விருப்பத்துக்கு மாறாக கத்தரித்தமை தொடர்பில் கிடைத்த முறைப்பாடு ஒன்றினையடுத்தே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து இவர்கள் இருவரும் நேற்று திங்கட்கிழமை தெல்தெனிய நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதனையடுத்து தலா 2500 ரூபா பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment