நூறு அடி பள்ளத்தில் வீழ்ந்த கார் சிறுமி மரணம் ஆறு பேர் காயம் - பொகவந்தலாவையில் சம்பவம் (படங்கள்) !!
வத்தளையிலிருந்து பொகவந்தலாவ பிரதேசத்திற்கு சென்ற கார் ஒன்று கினிகத்ஹேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் களனி கங்கையை அண்மித்த பகுதியில் கினிகத்ஹேன யட்டிபோலிய பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக் குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் இன்று (13) அதிகாலை 3.00 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளதோடு மேலும் ஆறு பேர் கிதுல்கல தெலிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனார் .இவர்கள் வத்தளை தெலங்கபான பிரதேசத்தையுடைய ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
விபத்துக்குள்ளாகியவா்கள் இன்று பொகவந்தலாவில் நடைபெறவிருந்த கல்யாணத்திற்காக மாப்பிள்ளையை அழைத்து வந்த குடும்பம் என கினிகத்ஹேன பொலிஸார் மேலும் தெரிவித்தனா். இவ்விபத்து தொடா்பான மேலதிக விசாரணைகளை கினிகத்ஹேன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனா்.
0 comments :
Post a Comment