Saturday, May 3, 2014

இலங்கை, போரில் எல்ரீரீயை தோற்கடித்தபோதும் பயங்கரவாத அமைப்பாக…!

தெளிவுறுத்துகின்றது அமெரிக்கா!

இலங்கையில் யுத்த ரீதியாக எல்.ரீ.ரீ.ஈ அமைப்பை தோற்கடித்தபோதும், எல்.ரீ.ரீ.ஈ அமைப்பை தொடர்ந்தும் பயங்கரவாத அமைப்பாகக் கருதுவதாக அமெரிக்கா தெளிவுறுத்துகின்றது.

சென்ற 2009 ஆம் ஆண்டில் எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாத அமைப்பை யுத்த ரீதியாக இலங்கையில் தோற்கடித்த போதும், அவ்வமைப்பின் மூலம் சர்வதேச ரீதியாக ஆயுதங்கள், தொடர்புசாதனங்கள், பண வசூலிப்பு போன்ற இன்னோரன்ன சட்டவிரோத செயல்கள் நடைபெற்றுவருவதாக அமெரிக்க அரச திணைக்களம் தெரிவித்துள்ளது.

மூன்று தசாப்தங்கள் இலங்கையில் நிலவிய யுத்தம் 2009 ஆம் ஆண்டில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் சிறப்பாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இலங்கை அரசு, அரசின் பாதுகாப்புப் பிரிவு செயற்பட்டபோதும், தற்போது சர்வதேசத்தினுள் எல்.ரீ.ரீ.ஈ ஆதரவாளர்களினால் பயங்கரவாதச் செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அத்திணைக்களம் தெரிவிக்கிறது.

பயங்கரவாதிகளால் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தி ஆகியோரும், காமினி திசாநாயக்கா, லலித் அத்துலத்முதலி போன்ற அரசியல் தலைவர்களும் கொலைசெய்யபட்டுள்ளனர். அதற்குப் பதலடி கொடுத்துள்ள அரச இராணுவத்தினர் அந்த பயங்கரவாத அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைக் கொலைசெய்தல், எல்.ரீ.ரீ. அமைப்பின் முக்கிய நிலப்பகுதி எனக் கருதப்பட்ட கிளிநொச்சி உள்ளிட்ட நிலப்பகுதிகளைக் கைப்பற்றுதல் முதலிய வெற்றிகள் பலவற்றை வெற்றிகொள்ள முடிந்துள்ளது என அமெரிக்க அரச திணைக்கள உத்தியோகபூர்வ இணையத்தளம் தெளிவுறுத்துகின்றது. பயங்கரவாத செயற்பாடுகளைச் செய்தல், அதற்காக ஏதேனும் ஒருவகையில் ஒத்துழைத்தல் முதலிய நிகழுமாயின், அவ்வாறான நபர் அல்லது குழுவினர் பயங்கரவாதிகளாகவே கொள்ளப்படுவர். அதாவது, குடியேற்ற தேசிய சட்டமூலத்தின் 219 ஆவது சரத்தின் கீழ் அமெரிக்க அரச திணைக்களத்தினால் குறித்த நபர் அல்லது குறித்த குழுவினர் பயங்கரவாதி எனக் குறிக்கப்படும்.

எல்.ரீ.ரீ.ஈ, ஹமாஸ், ஹிஸ்புல்லா, லக்ஷா ஈ டைபா, அல்கைதா உள்ளிட்ட 54 அமைப்புக்கள் பயங்கரவாத அமைப்புக்களாக அமெரிக்க அரச திணைக்களத்தினால் குறிப்பிடப்பட்டுள்ளன.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com