Wednesday, May 14, 2014

இதற்குத்தான் நாங்கள் ஆசியாவின் ஆச்சரியம் என்கிறோம்! கட்புலனாகாத சக்திகளிடமிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள்!

கட்புலனாகாத சக்திகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நாட்டு மக்களிடம் கேட்டுக் கொள்வதாக விவசாய அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்த்தன மாத்தறையில் இடம்பெற்ற விழாவொன்றின் போது குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்துரைக்கும் போது,

“எங்கள் நாட்டை யுத்தத்திலிருந்து மீட்டெடுத்ததன் பின்னர், முழு நாடும் ஒரு பணியிடமாக மாறியுள்ளது. எங்கு சென்று பார்த்தாலும் ஏதோ ஒரு வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. பாதை நிர்மாணிக்கப்படுகின்றது, பாடசாலைகள் உருவாக்கப்படுகின்றன, மருத்துவமனைகள் உருவாக்கப்படுகின்றன. அதனால் முழு நாட்டிலும் ஏதோ ஒருவகையில் ஏதோ ஒரு பணி நடைபெறுகின்றது. இதனைத்தான் நாங்கள் மகிந்த சிந்தனை என்கிறோம்.

இவ்வளவு துரிதமாக பணிபுரிந்த அரசாங்கமொன்று சென்ற காலங்களில் இருந்ததா? நெஞ்சில் கையை வைத்துக் கேளுங்கள்.. இனியும் இருக்கப் போவதில்லை. இன்று நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணம் ஜனாதிபதியின் தன்னிகரற்ற சேவையே. சமாதானத்தை விட்டும் நாங்கள் நீங்கினால் நாங்கள் எப்போதும் கைசேதத்திற்கு உள்ளாவோம். மீண்டும் போக - வர இடமில்லாமல் போகும். அதனால் வெற்றிகொண்டுள்ள சமாதானத்தை, பாதுகாப்பாக வைத்துள்ள நாட்டை எல்லோரும் ஒன்றிணைந்து முன்னேற்றுவதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இந்நாட்டை முன்னேற்றங் காணச் செய்வது எதிர்கால சமுதாயத்தினருக்கு ஒப்படைக்கவே. அதற்காகத்தான் கல்வித் திட்டத்தை மேம்படுத்துகின்றோம். கட்புலனாகாத சக்திகள் மூலம் நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளிலிருந்து நாட்டைக் காப்பாற்றுங்கள் என உங்களை நான் கேட்டுக் கொள்கின்றேன்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com