தனக்கு இழுக்கு உண்டாக்கிய ஞானசாரரிடம் 50 கோடி நட்டஈடு கோருகிறார் ரிஷாத் பதியுத்தீன்!
தன்னைப் பற்றி பிரசித்தமான முறையில் செய்த கூற்றொன்றினால் தனக்கு ஏற்பட்டுள்ள இழுக்கிற்காக ரூபா 50 கோடி நட்டஈடு வழங்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஆணையிடுமாறு அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளார்.
ஞானசாரர் சென்ற மார்ச் மாதம் 20 ஆம் திகதி ஊடகவியலாளர்களை ஒன்றுகூட்டி, தனது அரசியல் கோட்பாடுகளுக்கு பாதகம் விளைவிக்கும் கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார் எனவும், அதற்கான நட்டஈடாக ரூபா 50 கோடி தனக்கு வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment