Tuesday, May 20, 2014

பாதிரியார்கள் மீது காதல்! 26 பெண்கள் பாப்பரசருக்கு கடிதம்!

ரோமன் கத்தோலிக்க பாதிரியார்கள் மீது காதல் வயப்பட்டிருக்கின்ற பெண்கள் குழுவினர் பாப்பரசர் பிரான்சிஸுக்கு கடிதம் எழுதியுள்ளனர். கத்தோலிக்கத் திருச்சபையின் மதபோதகர்களுக்கான பிரம்மச்சரிய சட்டக் கட்டுப்பாட்டை மறுபரிசீலனை செய்யவேண்டுமென்று அவர்கள் பாப்பரசரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இத்தாலி மற்றும் வேறுசில நாடுகளைச் சேர்ந்த 26 பெண்கள், தாம் பாதிரியார்களுடன் காதல் வயப்பட்டவர்கள் என்றும் இன்னும் காதலில் இருப்பவர்கள் என்றும் பாதிரியார்களுடன் உறவினைத் தொடங்க விரும்புபவர்கள் என்றும் கூறியுள்ளனர்.

இதேமாதிரியான நிலையில் இருக்கின்ற ஏனைய பல பெண்களின் சார்பாக தாம் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தமது வாழ்க்கையை முழுமையாக வாழ முடியாதுள்ளமையின் வலியைப் பற்றி அவர்கள் இந்தக் கடிதத்தில் கூறியுள்ளனர்.

இதுபற்றி பேசுவதற்காக பாப்பரசரை சந்திக்க வேண்டும் என்றும் அந்தப் பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிரம்மச்சரிய பாரம்பரியத்தை பாப்பரசர் பிரான்சிஸ் முன்னர் ஆதரித்துவந்திருக்கிறார். ஆனால், அவரது நிலைப்பாடு மாறக்கூடியது என்பதை 2010 ஆம் ஆண்டில் எழுத்துமூலம் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் புரிவதற்காக தனது பதவியை துறந்த முன்னாள் ஆயர் ஜெரோமினோ பொடெஸ்டாவின் விதவை-மனைவியை, அவர் கடந்த நவம்பரில் உயிரிழக்கும் வரை பாப்பரசர் சென்று பார்த்துவந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com