சந்தேக நபரிடமிருந்து பலவந்தமாக 150,000 அபகரித்த பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு!
அல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசத்தில் சந்தேக நபர் ஒருவரை அண்மையில் பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபரிடமிருந்த 150,000 ரூபா பணத்தை பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலவந்தமாக அபகரித்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் அம்பலங்கொடை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சில வாரங்களுக்கு முன்னர் பணம் கொள்ளையிடப்பட்டதாகவும், கொள்ளையிடப்பட்ட பணத்தை வழங்குவதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் வாக்குறுதியளித்த போதிலும், வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என சந்தேக நபர் முறைப்பாடு செய்துள்ளார்.
0 comments :
Post a Comment