எல்.ரி.ரி.ஈ யினரால் பலாத்காரமாக கைப்பற்றப்பட்ட 108 ஏக்கர் காணியை உரிமையாளர்களுக்கு வழங்க, நடவடிக்கை!
கிளிநொச்சி மாவட்டத்தில் எல்.ரி.ரி.ஈ யினரால் பலாத்காரமாக கைப்பற்றப்பட்ட 108 ஏக்கர் காணியை மீண்டும் உரிமையாளர்களுக்கு வழங்க, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் றுவன் வனிகசூரிய தெரிவித்துள்ளார். சட்டரீதியான ஆவணங்களுடன் காணிகளின் உரிமையை உறுதிப்படுத்தும் நபர்களுக்கு, காணிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்டு, பின்னர் இராணுவத்தினரால் மீட்கப்பட்ட 108 ஏக்கர் காணியே கிளிநொச்சியில் உள்ளது. இக்காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. காணி உரிமைகளுக்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்காமல், காணிகளை ஒப்படைக்குமாறு ஆர்ப்பாட்டம் செய்வதனால், அவர்களுக்கு காணிகளை வழங்கும் வாய்ப்பு இல்லை. சட்டரீதியான ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே, இவ்வாறு காணிகளை ஒப்படைக்க முடியும் என தெரிவித்துள்ளார்
0 comments :
Post a Comment